சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தற்போதைய கட்சி தலைமைமீது புகார் கூறிய நிலையில்,  பொற்கொடியின் பதவியை பறித்து அகில இந்திய பகுஜன் சமாஜ்கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு மாநில பிஎஸ்பி தலைவராக இருந்து ஆம்ஸ்ட்ராக் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட பிறகு, அக்கட்சியின் புதிய தலைவராக  உச்சநீதிமன்ற வழக்கறிஞராக இருக்கும் பி.ஆனந்தன்  தேர்வு செய்யப்பட்டார்.  பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி,  தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக ஆனந்தனை  கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நியயிமித்தார். அத்துடன்  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், இவர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொற்கொடி தானே தலைவர் என்பதுபோல நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக,  கடந்த ஏப்ரல் மாதம்,   பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தனுக்கு எதிராக தமது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆவேசமாக புகார்  கூறியதுடன்,  , ஆம்ஸ்ட்ராங் நியமித்த பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்திருக்காங்க.. கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கை என்ன என்று தெரியுமா? இவ்வளவு கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்துவிட்டு ஈஸியாக பொறுப்புகளை விட்டுக் கொடுத்துவிடுவோமா? அப்படி எல்லாம் கொடுக்கமாட்டோம்.. மாநில தலைவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வாதிட்டார் பொற்கொடி .

அத்துடன் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள், மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு அளித்து முழக்கமிட்டனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.. இது கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைமை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை கட்சி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த  பொற்கொடி அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறலார்.

அவர் , தனது குடும்பர் மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கன் விசாரணையில் மட்டும் கவனம் செலுத்துவார்.

தேசியத்தலைவரின் உத்தரவின்படி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவர் இனிமேல் கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார்,  தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி இனிமேல் மாநில தலைவர் ஆனந்தன் தலைமையிலேயே செயல்படும். அவரது தலைமையின்கீழ் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிவித்து உள்ளது.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையையும், குடும்பத்தை மட்டுமே இனி கவனித்துக்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கமிஷனர் பேட்டி தவறானது – ’ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷ் காரணமில்லை!’ பிஎஸ்பி புதிய தலைவர் ஆனந்தன் பரபரப்பு தகவல்…