டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,  மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான  ராகுல்காந்தி எனது சமூக வலைதளத்தில் அம்பேத்கர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழிநடத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பாபா சாகேப்  அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் , அம்பேத்கரின் போராட்டங்கள் நம்மை வழி நடத்தும் என அவரது   பிறந்த நாளில்  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,   நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், ஒவ்வொரு இந்தியரின் சம உரிமைகளுக்காகவும், ஒவ்வொரு பிரிவினரின் பங்கேற்புக்காகவும் அம்பேத்கர் ஆற்றிய போராட்டமும் பங்களிப்பும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் எப்போதும் நம்மை வழிநடத்தும் என்று எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், ”இந்திய விடுதலைக்குக் காரணமான, அனைத்து இந்தியர்களின் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காகப் போராடிய நமது உத்வேகத்துக்குக் காரணமான, நாட்டின் கட்டுமானத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சிறந்த தொலைநோக்கு பார்வை யாளரான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி – பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளில், அவருக்கு எங்கள் மிகவும் பணிவான அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]