டெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பு மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும்  குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காமல் செயலற்ற தன்மையாக இருந்தால், மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறி உள்ளது.   இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு அரசின்  சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், பல்வேறு உலக நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விரிவாக அலசி ஆராய்ந்து  உச்சநீதிமன்றம்  414 பக்கம் கொண்ட தீர்ப்பை விரிவாக வழங்கி உள்ளது. இந்த  தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்றத்தின்  இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

கால தாமதத்தை குற்றவாளிகளுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம், தனக்குரிய சிறப்பு அதிகாரத்தின்மூலம் அவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே நாட்டின் முன்னாள் பிரதமரான ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிக்கு விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கிய விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில், தற்போது, தமிழ்நாடுஅரசின் சட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு, அரசியலமைப்பை மீறி சிறப்புஅதிகாரத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கி இருப்பதும் பேசும்பொருளாக மாறி உள்ளது.

அத்துடன், குடியரசு தலைவர், மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இதுமேலும் பரபரப்பைஎற்படுத்தி உள்ளது.

அரசியலமைப்பின் 201 வது பிரிவின் கீழ், ஒரு மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு எதுவும் குடியரசுத் தலைவருக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்றும்,  மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து, குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் ஆகியோருக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிடில், சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் நீதிமன்றங்களை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

மாநிலஅரசுகளின் மசோதாக்கள் மீது நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்காவிடில் நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளதது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் உயர்ந்த தலைவர் மற்றும் முதல் குடிமகன் குடியரசு தலைவர்.  ஆனால், அவருக்கே உச்சநீதி மன்றம் கெடு விதித்துள்ளது விவாதப்பொருளாக மாறி உள்ளது.