நடிகை கங்கனா ரனாவத்தின் வீட்டிற்கான மின் கட்டணம் ஒரு லட்ச ரூபாய் என்று மின்வாரியம் கூறியதால் அவர் ஷாக் ஆனார்.

மேலும், ஹிமாச்சல் பிரதேசத்தை ஆளும் சுக்விந்தர் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசு தன்னை பழிவாங்க இதை செய்துள்ளதாக மண்டி தொகுதி மக்களவை உறுப்பினரானரும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹிமாச்சல் மின்வாரியம், கங்கனா ரனாவத் வீட்டில் 94.82 கி.வாட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் இது வழக்கமாக வீடுகளுக்கு பயன்படும் மின்சாரத்தைக் காட்டிலும் 1500% அதிகம் என்றும் கூறியுள்ளது.

தவிர, இதற்கு முன் மின்கட்டண நிலுவை உள்ளதாகவும் அவர் கட்டணம் செலுத்தாமல் தவறுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு முன் ரூ. 32,287 நிலுவை வைத்துள்ளதாகவும் மார்ச் 22ம் தேதி அந்த நிலுவைத் தொகையுடன் இரண்டு மாத மின் கட்டணத்துடன் சேர்த்து மொத்தம் ரூ. 90,384 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளது.