மேஷம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம்  மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது அவசியம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். எங்கயும் எதுலயும் நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பிள்ளைகளுடைய போக்கில் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமை காக்கவும். உடனடியாக செய்யும் வேலையை விட்டு விட வேண்டாம். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பான விஷயம். பிசினஸ்ல பொறுமை தேவை. போட்டி பொறாமையால் அடுத்தவங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்துடாதீங்க. உங்க திறமையைப் பயன்படுத்தி முயற்சிகளை மேற்கொள்வது பெட்டர்ங்க.. நீண்ட பயணங்கள் சந்தோஷம் குடுக்கும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்

 ரிஷபம்

வீட்ல உள்ள வயசானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு செய்வது. அதிர்ஷ்டம் நிறைஞ்ச வாரமா இந்த வீக் இருக்கும். நீங்க தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடையும். நீங்க செய்த வேலைக்கு பாராட்டுகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செய்யாத வேலைகளுக்கு உண்டான ஊக்குவிப்பும் உங்களைத் தேடி வரும். அந்த அளவுக்கு ராசி உங்களுக்கு வேலை செய்யப் போகுது. சாதிக்க முடியாத நிறைய விஷயங்களை இந்த வாரம் சாதிக்கப் போறீங்க. அல்லது அதற்கான முயற்சிகள் செய்யப்போறீங்க. நல்லது கெட்டதை சரியாக எடை போடும் அளவுக்கு திறமையாக இருப்பீங்க. பொருளாதாரத்தில் உயர்ந்து நிலைக்கு செல்வீங்க. தலை குனிந்த இடத்தில எல்லாம் தலை நிமிர்ந்து நடப்பீங்க. உழைப்புக்கு ஏற்ற வெற்றி உங்களை வந்து சேரும். பேரன்ட்ஸ் ஆரோக்கியத்துல நல்ல மேம்பாடு இருக்கும்.

மிதுனம்

பிள்ளைங்களோட முன்னேற்றத்துக்காக நிறைய பாடுபடுவீங்க. ஆரோக்கியத்துல கவனம் செலுத்துங்கள். அதிக நேரம் வெளியிடங்களில் நேரத்தை செலவு செய்யாதீங்க. குறித்த நேரத்திற்கு வீடு வந்து ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. இந்த வாரம் துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மை செய்யும். ஜெயித்தே ஆக வேண்டும் என்ற வெறி இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் லேசாக விட்டுவிட மாட்டீர்கள். தோல்வியே அடைந்தாலும், அதுல பலமுறை முயற்சி செய்து வெற்றிவாகை சூடுவீங்க. மன தைரியம் வெளிப்படும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் சண்டை என்று எதுலயும் இறங்கிட வேணாம்னு உங்களுக்கு நீங்களே கட்டளை போட்டுக்குங்க. வாரம் முழுவதும் அலைச்சலோடு இருப்பீங்க. எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் நல்லபடியா முடியும்.. ஆபீஸ்ல இருந்துக்கிட்டிருந்த சின்ன சின்னப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து நிம்மதி தரும். உடல் அசதி உண்டாகும். எதிர்பார்த்த அளவுக்கு மனநிறைவு

கடகம்

தைரியமா செயல்படுவீங்க. எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்று இறங்கிடுவீங்க. வெற்றியும் உங்களுக்கு துணையாக நிற்கும். எதிரிங்க எல்லாம் தானாக உங்க வாழ்க்கையை விட்டு விலக்குவாங்க. துணிச்சல் இருந்தாலும், தைரியம் இருந்தாலும், ஒருபோதும் நேர்மைக்கு புறம்பாக நடந்து கொள்ள மாட்டீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தேவை இல்லாமல் நேரத்தை செலவழிக்க கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த வாரம் மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும். காதல் வாழ்க்கையில உற்சாகமாக இருப்பீங்க. பணியிடத்துல  சிறிய சவால்கள் இருக்கும், ஆனால் உங்களோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்ள முடியும்.

சிம்மம்

பல நாட்களா இல்லாத நிம்மதியும் சந்தோஷமும் மனசுல நிறையும். இந்த வாரம் திறமை வெளிப்படக் கூடிய வாரமாக இருக்கும். எந்தெந்த வேலையை எப்பிடிச் செய்தால் அந்த வேலை சீக்கிரம் முடியும்னு நல்லாத் தெரிஞ்சு வைச்சிருப்பீங்க. பிரச்சனையான சூழ்நிலையைக் கூடச் சுலபமாக் கடந்து செல்வீங்க. பிசினஸ்ல அனுபவம் வெளிப்படும். புதிய மனிதர்களின் நட்பு இன்னும் கொஞ்சம் கூடுதல் நன்மையை கொடுக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்துல கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு பழகும் போது ஒரு எல்லை வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் நெருங்கி அளவுக்கு மீறி பழகும் போது சண்டை சச்சரவுகள் வரலாம். சொத்து பிரச்சனைகள் வந்தாலும்கூட உங்க பக்கம் வெற்றி வாய்ப்புகள் இன்கிரீஸ் ஆகும், நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி

இந்த வாரம் திறமை வெளிப்படக் கூடிய வாரமா இருக்கும். பாராட்டும் அவார்டும் கெடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல அதிகப்படி கவனமா இருக்கணுங்க. புது ஃப்ரெண்ட்ஸ்ஸோட பழகும் போது ஒரு எல்லை வைச்சுக்குங்க. குடும்பத்துலயும் வெளிவட்டாரத்துலயும் ஆபீஸ்லயும் சச்சரவுகள் மற்றும் வாக்குவாதங்களைச்த் தவிர்த்துக்கணுங்க. ஸ்டூடன்ஸ்க்குக் கல்வியில நல்ல முன்னேற்றம் இருக்கும். கோயில் குளம்னு பயணம் போவீங்க. பிசினஸ்ல சக வியாபாரிகளோடு போட்டி பொறாமை காரணமா முன்னேற்றத்துல கவனம் செலுத்துவீங்க.. புதிய நண்பர்களும், நல்லங்க நட்பும் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. பயணத்துல ஜாக்கிரதியாக இருக்கணுங்க. இந்த வாரம் தினமும் வாராகி அம்மனை நினைத்து வழிபாடு செய்யுங்கள். எதிரியின் மூலம் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும். வாரக் கடைசில ஜாலியா சுத்துவீங்க.

துலாம்

இந்த வாரம் சந்தோஷம் நெறைஞ்ச வாரமா இருக்கும். பொருளாதாரத்துல நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை ஓரளவாச்சும் குறையும். ரொம்பக் காலாம வராமல் ஆட்டம் காட்டிக்கட்டிருந்த பணம் கையை வந்து சேரும். தொழிலில் முதலீடு செய்வீங்க. புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கும் சான்ஸ் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். பயணத்தின் போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்ல தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். எந்த மோதல் வந்தாலும் இறுதியில் உங்களுக்குத்தான் வெற்றி. சில பேருக்கு இந்த துணிச்சல் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற நண்பர்கள், தானாக விலகி விடுவாங்க. நல்லவங்க உதவி கிடைக்கும்.

விருச்சிகம்

பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வீங்க. நஷ்டமான விஷயங்களை எல்லாம் லாபமாக மாற்ற அயராது உழைப்பீங்க. ஒங்களோட அம்மாவுக்கு உடல் உபாதைகள் தீர்ந்து ஆரோக்கியம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் பொறுமை காக்கவும். உடனடியாக செய்யும் வேலையை விட்டு விட வேண்டாம். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பான விஷயம். பிசினஸ்ல பொறுமை தேவை. போட்டி பொறாமையால் அடுத்தவர்களை பார்த்து நாமும் சூடு போட்டுக்கொள்ள கூடாது. நமக்கு என்ன திறமை இருக்கிறதோ, அதை மட்டும் பயன்படுத்தி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அகல கால் வைக்கக்கூடாது. வீட்ல இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு செய்வது உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவங்களுக்கும் நன்மை செய்யும்.

தனுசு

புது ஆளுங்ககிட்ட டீல் செய்யும்போது ஜாக்கிரதையா இருந்துக்குங்க. எந்த விஷயத்துலயும், நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. பிள்ளைகளுடைய போக்கில் திருப்திகரமான மாற்றம் தெரிய வந்த நிம்மதியை விநியோகிக்கும். நடத்திக் காட்ட முடியாத வேலைகளை இந்த வாரம் கையில் எடுத்தால் சுலபமாக நடத்திக் காட்டி நீங்களே ஆச்சர்யப்படுவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஃபாரின் சென்று வேலை செய்ய வேண்டும் அல்லது படிக்க வேண்டும் என்று நினைக்கறவங்களுக்கு நல்ல சான்ஸஸ் தேடி வரும். தாய் தந்தையின் ஆசிர்வாதம் கெடைக்குங்க. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீராத உடல் பாதைகள் தீரும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மையை செய்யும். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்லது செய்யும்.  பயணம் நன்மை தரும்.

மகரம்

நிதி நிலைமை கொஞ்சம் உயரும். தேவையற்ற பண பிரச்சனையில் இருந்து வெளி வருவீங்க. வாங்கிய கடனை திருப்பி அடைச்சுடுவீங்க. வட்டி சுமை குறையும். குடும்பத்துல நிம்மதி பிறக்கும். பிசினஸ்ல அதிக கவனம் செலுத்துவீங்க. வாழ்க்கையில முன்னேறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீங்க. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கணுங்க.. ஈஸியா ஜீரணம் ஆகாத உணவை எடுத்துக் கொள்ளாதீர்கள். வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதும் நல்லது. உங்களால இயன்ற உதவிகளை முதியவர்களுக்கு செய்யப்போறீங்க. இதனால நல்லது நடக்கும் என்பது மட்டுமில்லை. அவங்களோட ஆசீர்வாதமும் கெடைக்கும். வாகனங்களை ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உறவுகளோடு பேசும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும்.

கும்பம்

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். இந்த வார துவக்கத்தில் சில பல பிரச்சனைகள் வந்தாலும், உடல் சோர்வு மனசோர்வு சங்கடங்கள் இருந்தாலும், வார இறுதியில் உங்களுடைய வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீங்க. ஆரோக்கியமும் ஜம்மென்று ஆயிடும். புதிய முயற்சிகள் இருந்தால், வார இறுதியில் அதை செய்யாமல். வார துவக்கத்தில் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினால் போதும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷமும் திருப்தியும் அடைவீங்க. உங்ககிட்ட ஆத்திரமாப் பேசுபவர்களிடமும்கூட நீங்க பக்குவமாக நடந்துக்குவீங்க. அடுத்தவங்க மீது பழி போட மாட்டீங்க. கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கும். எதை எடுத்தாலுமே கொஞ்சம் நிதானப்போக்குலதான் நகரும். டென்ஷனே ஆகாதீங்க. குறித்த நேரத்தில் நல்லபடியா முடிஞ்சு நிம்மதியாயிடுவீங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்

மீனம்

பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும்கூடசாத்தியம் உள்ளது. சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டிருந்திச்சே.. அதெல்லாம் சரியாகும். வாரப் பிற்பகுதியில் வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் அனுகூலமாகும். சிம்ப்பிளாச் சொன்னார்ல இந்த வீக் எல்லாத்துலயும் பொறுமையைக் கடைப்பிடிங்க. தட்ஸ் ஆல். பிசினஸ்ல லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். சிலருக்கு பிசினஸ்லயோ        அல்லது ஜாப்லயோ, வெளிநாட்டு ஒப்பந்தம் கெடைக்குங்க. ஆபீஸ்ல கடுமையாக உழைக்கறவங்களுக்கு நல்ல பெயர் உத்தரவாதமாக் கெடைக்கும். உங்களுக்குச் சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களை நினைத்து மனதை வருத்திக் கொள்ள வேணாம். கற்பனை பயம் வேணவே வேணாம்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்