சென்னை அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் கடநத் 3 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றம் புகாரின் பேரில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் வீடு, அவரது சகோதரர்கள் மறைந்த கேஎன் ராமஜெயம் மற்றும் சென்னையில் வசிக்கும் கேன். ரவிச்சந்திரன், கோவையில் உள்ள கே.என்.மணிகண்டன் மற்றும் உறுவினர்கள் வீடு, நிறுவனங்கள் மற்றும் டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறையினர் கடந்த 7ந்தேதி அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.
அதாவது, அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு பங்குதாரர்களாக உள்ள கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 7 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பறப்பட்டதாக கூறப்பட்டது. அமைச்சர் நேரு உள்பட பலரது வீடுகளில் ஒரேநாளில் சோதனை முடிவடைந்த நிலையில், கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் சென்னை மற்றும் திருச்ச வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக தொடர் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனை நிறைவடைந்தது.
இதற்கிடையில் கே.என். ரவிச்சந்திரனை மட்டும் அமலாக்கத்துறை, தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையும் ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, 72 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றது. இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை யினர் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.