சென்னை: மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த குமரி அனந்தனுக்கு சட்டப்பேரவையில் இலங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு நட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றை பேரவை அமர்வுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். ஏற்கனவே நேற்றும் அவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். குற்றம்சாட்டினர். இந்த நிலையில், இன்று அனுமதி 2-வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர்.
இன்று காலை பேரவை கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதனைத் தொடர்ந்து, பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்