அகமதாபாத்
தாம் இப்போது நலமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தேசிய, காங்கிரஸ் நாடாளுமன்றக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து காங்கிரஸ் அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பங்கேற்றிருந்தார். நேற்று சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர். அங்குடாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துனர்.
ப சிதம்பர்ம தனது எக்ஸ் வலைதளத்தில்,
”அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது.
அனைத்து பரிசோதனைகளும் நார்மலாக உள்ளது. நான் இப்போது முழுமையாக நலமாக இருக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.
எனப் பதிவிட்டுள்ளார்.