சென்னை: சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்து வருவதை கண்டித்து,   சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று அவைக்கு  கருப்பு சட்டையுடன் வந்திருந்தனர்.

நேற்றைய அமர்வின்போது, டாஸ்மாக் ஊழல் குறித்து  அந்த தியாகி யார் என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுத்த சபாநாயகருக்கு எதிராக அந்த தியாகி யார்  என பதாதைகளுடன் கோஷமிட்டனர். இதனால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், அதிமுகவினர் அந்த பேட்ஜை அகற்றிவிட்டுதான் அவையில் பங்கேற்க வேண்டும்  சபாநாயகர் கறாராக கூறினார்.

சபாநாயகரின் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்து,  இன்றைய அவைக்கு வந்த அதிமுக எம்எல்எக்கள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசின்  பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து, கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய  கூட்டத்தொடரின் இன்றைய நாளில் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

நேற்று (ஏப்ரல் 7ந்தேதி) அவையில், ஏற்கனவே அமலாக்கத்துறை,  டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்திய சோதனை மற்றும் அமலாக்கத்துறையின் அறிக்கைகைய சுட்டிக்காட்டி,  “அந்த தியாகி யார்?” என்ற பேட்ச் அணிந்தும், பேரவைக்குள் விளம்பர நோட்டீசுகளை கைகளில் பிடித்தும் சலசலப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து,  நடப்பு கூட்ட தொடரில் பங்கேற்கும் போது எந்த விதமான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களையும், பேட்ஜ்களையோ அவைக்குள் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடும் விதித்திருந்தார்.

(கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தடை செய்யப்பட்ட குட்கா, போதை பொருள் தொடர்பான துண்டு பிரசுரங்களை கொண்டு வந்து சலசலப்பை ஏற்படுத்தியது இதுதொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரின் உத்தரவை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

இந்த நிலையில் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று பேரவைக்கு வருகை தந்தனர்

‘அந்த தியாகி யார்?’ பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் – ஒரு நாள் சஸ்பெண்டு!