சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய  சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பல்கலை கழக விதிகளை மீறி பெரியார் பல்கலை கழகம் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் தொடங்கியதாக புகார் எழுந்தது. இதனால் துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் இளங்கோவன் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் துணை வேந்தர் ஜெகநாதன், தங்கவேல் உள்ளிட்டோர் மீது சேலம் கருப்பூர் போலீசார் வழக்கு செய்தனர்.

இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன், தங்கவேல் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் அளித்தனர்.

இதற்கிடையில், ஜெகநாதன் மீது,   மோசடி, முறைகேடு வழக்கு தவிர சாதியை குறிப்பிட்டு திட்டியதாக ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது, அவரை  சேலம் 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உடனடியாக ஜாமீன் வழங்கியது.

இநத் நிலையில்,   துணை வேந்தர் ஜெகநாதன் தரப்பில், தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதிட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

[youtube-feed feed=1]