சென்னை
இந்த ஆண்டு தமிழக நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதாக அமைச்சர் கே நேரு தெரிவித்துள்ளார்.

இன்றைய தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, சிக்கராபுரம், மணிமங்களம் ஏரிகளில் கூடுதல் நீரை சேமித்து பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் கே.என்.நேரு,
“சிக்கராயபுரம் கல் குவாரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக ரூ.40 கோடியில் நீர்வளத்துறை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”
என்று பதிலளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel