நெல்லை

நெல்லையில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ கருப்பசாமி பாண்டியன் இன்று காலை மரணம் அடைந்தார்.

கடந்த 1977 மற்றும் 1980 ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் கருப்பசாமி பாண்டியம்  அதிமுகவில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார், பிறகு இவர் கடந்த 2000ம் ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்படவே, திமுகவில் இணைந்தார்

கடந்த 2006 தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து திமுக எம்.எல்.ஏ. ஆக தேர்வான கருப்பசாமி பாண்டியன் கடந்த, 2015ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்

பிரகு 2016ல் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிய அவருக்கு, சசிகலா பொதுச் செயலாளராக இருந்தபோது அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.  அவர் 2017ல் கட்சியில் இருந்து விலகி 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் இணைந்தார்

இந்நிலையில் இன்று காலை உடல்நல்ககுறைவால் நெல்லையில் கருப்பசாமி பாடியன் மரணம் அடைந்துள்ளார்.  அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்/