சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, இன்று ஜாக்டோ ஜியோ சங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. இந்த நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு எப்பாதும் பால மிரட்டல் விடுத்துள்ளது.

முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் நிலையில், திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிர்யர்கள் கூட்டமைப்பான ஜாக்டா ஜியோ   பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வ நத்ன. இதைத்தொடர்ந்து,  பிப்ரவரி 25ம் தேதி, மாநிலம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து, அவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை. 15 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஒன்று மட்டுமே, 2026 ஏப்ரல் முதல் வழங்கப்படுவதாக  தெரிவிக்கப்பட்டது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கை என கூறி  அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள்  மார்ச் 19ந்தேதி ( இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்ததில் ஈடுபடுகின்றனர்.

இநத் நிலையில்  பணிக்கு வராமல் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. காலை 10 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து,  தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ள   உத்தரவில், “அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை(மார்ச் 19) அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும்.

அவ்வாறு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது. பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ…. தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி