சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  மேயர் பிரியா தலைமையில் தொடங்குகிறது. இன்றைய தினம்  மாமன்றத்தில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், மாநகராட்சி  வளாகத்தில் உள்ள மாமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.

இதில் மாநகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேயர் பிரியா அறிவிக்கவுள்ளார்.

இதைத தொடர்ந்து 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம்பெற வேண்டும் என சென்னைவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.