குன்னூர்: நடப்பாண்டு ஊட்டி மலர் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்குவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு நடைபெறவுள்ள கோடை விழாக்களின் தேதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று அறிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக கோடை விழா நடத்தப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் ஊட்டிக்குபடையெடுப்பர். அதனால், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஊட்டியில் களைகட்டும். அங்கு நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள்,. இதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் உதகையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்துவது அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உள்ளிட்ட முக்கிய கண்காட்சிகள் நடத்துவதற்கான செய்திகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உதகையில் இந்த ஆண்டு கோடை விழா மே 3-ந்தேதி தொடங்குகிறது. இதில் புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும். கோத்தகிரி நேரு பூங்காவில் 13 வது காய்கறி கண்காட்சி மே 3, 4 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் ன்றார்.
அதனை தொடர்ந்து மே 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் கூடலூரில் 11-வது வாசனை திரவிய காட்சியும்,
உதகை அரசு ரோஜா பூங்காவில் மே 10, 11, 12 ஆகிய 3 நாட்கள் 20-வது ராஜா கண்காட்சி நடைபெறும் என்றார்.
அதனை தொடர்ந்து உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி மே 16 முதல் 21 வரை 6 நாட்கள் நடைபெறும் என்றும்
மே 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி நடைபெறும் என்றார்.
மேலும் முதல் முறையாக குன்னூர் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி மே 30 , 31 மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்கள் காட்டிரி பூங்காவில் மழை பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.