சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
‘தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் அமர்வு இன்று காலை தொடங்கியது. முதல்நாள் அமர்வான இன்று வழக்கமான நடைமுறைகளுடன் அவை தொடங்கியதும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 2025-26ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசி வருகிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம்…
நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்து வருகிறது. மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும்.
நகர்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் புதிய நகரில் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். இதற்கேற்ற குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.310 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும்.
அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்
சென்னை – திண்டிவனம் – விழுப்புரம்
சென்னை – காஞ்சிபுரம் – வேலூர்,
கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம்
மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி பெறும் வகையில் சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்.
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்
சென்னை – திண்டிவனம் – விழுப்புரம்
சென்னை – காஞ்சிபுரம் – வேலூர்,
கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம்
மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான குடிநீர்:
சமச்சீரான குடிநீர் விநியோகத்திற்காக சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.2423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். மேலும், ரூ.602 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்.
சென்னையில் அறிவியல் மையம்!
1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.152 கோடி மதிப்பில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் அறிவியல் மையம். சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்
தாம்பரத்தில் திடக்கழிவு மின்சாரம் தயாரிக்கும் ஆலை:
திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும். அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும். இதன்மூலம் மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
மகளிர் சுயஉதவிக்குழு:
மகளிர் நலத் திட்டங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்திற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தற்போது 4 லட்சத்துக்கு 6 ஆயிரம் பெண்கள் பயன்பெறுகின்றனர். உயர்க்கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 19 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வரும் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தில் புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிதாக, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.
சென்னை கோவளம் அருகே 4377 ஏக்கர் பரப்பில் வெள்ள வடிநீரை தேக்கி 6-வது நீர்த்தேக்கம் அமைக்க ரூ.350 கோடி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1434 கோடி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1434 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்துத்துறை
3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.1200 கோடி சென்னைக்கு 950 மின் பேருந்துகள், கோவைக்கு 75 மின் பேருந்துகள், மதுரைக்கு 50 என மொத்தம் 1175 மின் பேருந்துகள் வாங்கப்படும்
கிண்டி, வண்ணாரப்பேட்டையில் தலா ரூ.50 கோடியில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும்
சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்படும்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 கோடியில் ஊக்க நிதியம் அமைக்கப்படும்
போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மதுரை, கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தப்படும்
சென்னை – திண்டிவனம், சென்னை – காஞ்சிபுரம், கோவை – திருப்பூர் வழித்தடங்களில் மிதவேக மெட்ரோ ரயில்களை இயக்க நடவடிக்கை
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம்சென்னை – காஞ்சிபுரம் – வேலூர்,கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்புபூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம்: டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.