சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள மதுபான ஊழல் மூலமாக ரூ.1000 கோடி திமுகவிற்கு சென்றுள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் சப்ளை செய்யும், மதுபான ஆலைகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ.992 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி உள்ள நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரெய்டில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக் கொள்கை முறைகேடு ஆரம்பமாகியுள்ளது என்றும் மதுபான ஆலைகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மதுபான ஊழல் மூலமாக ரூ.1000 கோடி திமுகவிற்கு சென்றுள்ளது, திமுக தேர்தல் செலவுக்காக இந்த பெருந்தொகை பயன்படுத்தப்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
டாஸ்மாக் நிறுவனமும், மதுபான ஆலைகளும் இணைந்து தமிழ்நாடு மதுபானக் கொள்கையை நிர்ணயிக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
அதானி நிறுவனத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.39000 கோடி இழப்பு?