டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு  மற்றும், மேலும் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் மும்மொழிகுறித்தும் காங்கிரஸ் கட்சி இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்,   காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தொகுதி சீரமைக்கப்பட இருப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு போராட்டங்களையும், மத்தியஅரசுக்கு எதிரான மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தையும்  கூட்டி   உள்ள நிலையில், இதுவரை தொகுதி சீரமைப்பு குறித்து கருத்துதெரிவிக்காத காங்கிரஸ் கட்சி வரும் 10ந்தேதி எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளது.

“மக்களவை தொகுதி மறுவரையறை என்பது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொடர் செயல்முறை.  இது  ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான ஒரு விஷயம். இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம். மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப தொகுதிகள் நியாயமான முறையில் சீரமைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சட்டங்கள் கூறுகிறது.

1952, 1962, 1972 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் எல்லை மறுவரையறை ஆணையச் சட்டங்களின் கீழ், கடந்த காலங்களில் நான்கு முறை – 1953, 1962, 1972 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் – எல்லை மறுவரையறை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, மாநிலங்களின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் மக்களவையில் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, 1976 ஆம் ஆண்டில் மத்திய அரசு எல்லை மறுவரையறையை நிறுத்தி வைத்தது. இது தொகுதிகளின் அளவில் பரந்த வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது, மிகப்பெரிய தொகுதியில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களும், சிறிய தொகுதியில் 50,000 க்கும் குறைவான வாக்காளர்களும் இருந்து வருகின்றனர்.

இதை மீண்டும் மாற்றி அமைக்க மத்தியஅரசு முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக  உள்ள ஆணையம் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், தொகுதி சீரமைப்பு எல்லை நிர்ணயத்தை 2026 க்கு முன் நடத்த முடியாது. அதன்பிறகே நடத்த வேண்டிய நிலை உள்ளது.  அதனால், இதற்கு தமிழ்நாடு அரசு உள்பட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொகு மறுவரைமுறைக்கான  ஆணையம் ஒரு சுயாதீன அமைப்பாகும், அதன் உத்தரவுகளை எந்த நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது. இந்த உத்தரவுகள் மக்களவை மற்றும் அந்தந்த மாநில சட்டமன்றங்களுக்கு முன் வைக்கப்படுகின்றன. இருப்பினும், மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆளும் திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால், மத்தியஅரசு தொகுதிகள் குறையாது என கூறி வருகிறது. ஆனால், அதை ஏற்க மறுத்துள்ள திமுக அரசு, அடுத்த 50 ஆண்டுகளுக்கு தொகுதி சீரமைக்கப்படாது என மத்திய அரசு உத்தரவாதம் தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது இதுகுறித்து,   அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானமும் கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த  ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக , மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) பகவந்த்சிங் மான் (பஞ்சாப்) பினராயி விஜயன் ( கேரளா) சித்தராமையா ( கர்நாடகம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) , இமாச்சல பிரதேசம் (காங்கிரஸ்)   மற்றும்  அனைத்து கட்சி மூத்த தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த 2 விவகாரங்கள் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள் (10-ந்தேதி) மாலை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மேல் சபை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கை திட்டம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது என்ன  நிலைப்பாடு எடுக்கப்போகிறது என தெரியவில்லை.