சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் அய்யா வைகுண்டர் 193 ஆம் அவதார தின்னத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் மாசி 20 ஆஅம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் ண்டாடப்பட்டு வருகிறது.  அவ்வகையில் அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இன்று நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அரசியல் கட்சி தலைவர்கள் அய்யா வைகுண்டர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்-வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள். “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம் ”

என்று பதிவிட்டுள்ளார்.