விருதுநகர்: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. விஜயபிரபாகரனை விட,  காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து போட்டியிட்ட  தேமுதிக வேட்பாள விஜயபிரபாகரன், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக குற்றம் சாட்டினார். பின்னர் இதுதொடர்பாக, வழக்கும் தொடர்ந்தார்.

இநத் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  தனக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரிய மாணிக்கம் தாக்கூர் மனு செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், மாணிக்கம்தாக்கூரின்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தரிலன்போது,  விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனும், மாணிக்கம் தாக்கூரும் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே மாறி மாறி முன்னேறி வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிககம் தாக்கூர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில், விஜயபிரபாகரன் வெற்றிபெறுவார் என மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், எண்ணிக்கையின்போது, அவர் தோல்வி  அடைந்ததாக அறிவிக்கப்பட்டது அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இங்கு போட்டியிட்ட மாணிக்கம்தாகூர் 3 லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகளையும், விஜயபிரபாகரன் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகளையும் பெற்றனர். மாணிக்கம் தாகூர், 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனால் இந்த விவகாரம் பெரும் பேசும்பொருளாக மாறியது.  இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கையின்போது இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை யில் தாமதம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் இந்ததேர்தல் முடிவு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.