சென்னை
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் வரும் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.’

வளசரவாக்கம் போலீசார் நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வீட்டில் சம்மன் ஓட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டதால் அது பற்றி போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்றபோது, அங்கிருந்த காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், காவலாளியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார், அவரை கைது செய்து வேனில் அழைத்து சென்று காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சீமான் வீட்டில் இருந்த காவலாளி மற்றும் உதவியாளர் மீது போலீஸ் தரப்பில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன.
தனை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்தநிலையில், உடனிருந்த காவலர்கள் தங்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட மற்றொரு புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சீமானி இல்லத்தில் கைதான காவலாளி அமல்ராஜ் மற்றும் உதவியாளர் சுபாகர் ஆகியோரை சோழிங்கநல்லூர் நீதிபதி கார்த்திகேயன் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலாளி அமல்ராஜ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாகவும், சம்மனை கிழித்த சுபாகர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேரை வரும் மார்ச் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்தால் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ளனர்.