சென்னை
ஓடிடியில் இந்தவாரம் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ

ஒவ்வொரு வாரமும் திரையறங்குகளில் பல புதிய படங்கள் ரிலீசாகி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன., இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’. கடந்த 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘பிளட் அண்ட் பிளாக்’
குரு கார்த்திகேயன் எழுதி இயக்கிய திகில் திரைப்படம் பிளட் அண்ட் பிளாக் . இப்படத்தில் சுகி விஜய் மற்றும் யானி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த படத்தை ப்ளூ வேல் என்டர்டெயின்மென்ட்ஸ் பதாகையின் கீழ் ஹரி கிருஷ்ணன் வாசுதேவன் தயாரித்துள்ளார். இப்படம் இன்று ( 27-ந் தேதி) டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘சுழல் 2’
கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தொடர் ‘சுழல் 2’. மேலும் நடிகை கவுரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இணைந்து இயக்கியுள்ள இந்த வெப் தொடர் நாளை (28-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
‘குடும்பஸ்தன்’
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் ‘குடும்பஸ்தன்’. இதில் மணிகண்டன் மற்றும் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் நாளை ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பராரி‘
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பராரி’ . இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளார். ஆதிக்க சாதி – ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.