போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
88 வயதான போப் உடல் நிலை 11வது நாளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் நிர்வாக முடிவுகளை எடுப்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வாடிகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாடிகன் “மாற்று” (Vatican “substitute”) அல்லது தலைமை ஊழியர் என்று அழைக்கப்படும் கார்டினல் பியட்ரோ பரோலின் மற்றும் பேராயர் எட்கர் பெனா பர்ரா ஆகியோரை பிரான்சிஸ் சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அடிப்படையில் வாடிகன் பிரதமராக இருக்கும் பரோலினை போப் சந்தித்தது இதுவே முதல் முறை.
இந்த கூட்டத்தின் போது, பிரான்சிஸ் இரண்டு புதிய புனிதர்கள் மற்றும் ஐந்து பேருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஆணைகளை அங்கீகரித்தார் – இது புனிதர் பட்டத்திற்கான முதல் படி. “எதிர்கால புனிதர் பட்டமளிப்பு விழாக்கள் குறித்து ஒரு நிலைக்குழுவை கூட்டவும்” பிரான்சிஸ் முடிவு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பிரான்சிஸ் ஒரு ராஜினாமா கடிதத்தை ஏற்கனவே எழுதியுள்ளார், என்றும் அவர் மருத்துவ ரீதியாக இயலாத நிலையில் உள்ளதால் அதை செயல்படுத்த அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அவரது இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர் வாடிகனுக்கு வெளியே ரோமில் வசிப்பார் என்றும், இதற்கு முன் இதேபோல் ராஜினாமா செய்த போப் பெனடிக்ட் அழைக்கப்பட்டது போல் ‘எமரிட்டஸ் போப்’ என்று அல்லாமல் ”ரோமின் எமரிட்டஸ் பிஷப்” என்று அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.