சென்னை: மத்தியஅரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

புதிய கல்விக்கொள்கைபடி, மும்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதனால், மத்தியஅரசு கல்வி நிதியை தர மறுத்து வருகிறது. இதை எதிர்த்து, திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் மத்தியஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதைதொடர்ந்து, மத்தியஅரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிப்பதாக ஒன்றிய அரசை கண்டித்து 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாணவரணி அறிவித்து இருந்தது.

அதன்படி,  இன்று தமிழ்நாடு முழுவதும்  சென் ன முக்கிய நகரங்களில் தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கல்வி நிதியை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசுக்கு நிபந்தனை விதிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை ஒன்றிய அரசு பறிப்பதாக குற்றம்சாட்டினர் மதுரையில் இந்தி திணிப்பை எதிர்த்தும், கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையிலும் ஒன்றிய அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி, திராவிடர் மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. DMK protest. மும்மொழி கல்வி திமுக திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்