சென்னை

சி பி  எஸ் இ பள்ளி குறித்து  அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்  செய்தியாளர்களிடம்.

பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக்கொண்டு இருக்கிறார். இரட்டை வேடம் போடக்கூடிய நிலை எனக்கு இல்லை. தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஸான் என்ற திட்டத்திற்கு ஏன் நிதி தர வில்லை? அது குறித்தெல்லாம் அண்ணாமலை பேச மாட்டார்.

உண்மையில் அண்ணாமலை அக்கறை உடையவராக இருந்தால் ஏன் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் கொடுக்க வேண்டும் என போராடவில்லை.

எந்த மொழி மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை, ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் இந்தியை கற்க வேண்டும். இந்த தேசத்தில் ஒரே மொழிக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதே எதிர்க்கிறோம்.

இந்தியாவில் சனாதன சட்டம் நடைமுறையில் இருப்பது உண்மை என்பதை நிரூபித்துக் காட்டக்கூடிய இடம் தான் நீதிமன்றம்.

எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அந்த பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை, அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. அந்த இடம் எங்களுடைய இடம் என்பதால் என் பெயரை பயன்படுத்தியுள்ளனர்”

என்று தெரிவித்துள்ளார்.