தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி 20க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இவர்கள் அவரின் செயல்பாடு பிடிக்காததை அடுத்து அவரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கோட்டாங்கரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மேலும், இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel