ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG கிளையாக செயல்படும் ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (RCPL), புகழ்பெற்ற இந்திய குளிர்பான பிராண்டான காம்பா கோலாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது,
இந்திய சந்தையில் கோகோ கோலா மற்றும் பெப்சிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த 1980 காலகட்டத்தில் இந்தியாவில் காம்பா-கோலா மற்றும் தம்ஸ் அப் பிரபலமாக இருந்தன.

காம்பா கோலா, காம்பா எலுமிச்சை, காம்பா ஆரஞ்சு மற்றும் பூஜ்ஜிய சர்க்கரை விருப்பமான கோலா ஜீரோ உள்ளிட்ட நான்கு விதமான குளிர்பானங்களை UAE சந்தையில் காம்பா அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பான நிகழ்வான Gulfood 30வது நிகழ்வில் காம்பா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதன் முதல் சர்வதேச சந்தை நுழைவைக் குறிக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், புது தில்லியின் ப்யூர் டிரிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2022 ஆம் ஆண்டு ரூ. 22 கோடிக்கு காம்பா கோலா பிராண்டை வாங்கி 2023 ஆம் ஆண்டு அதை மீண்டும் அறிமுகப்படுத்தியது.
ரிலையன்ஸ், காம்பா கோலாவை மேற்கு ஆசியாவிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.