கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசு பார்வையாளர்கள் மீது விழுந்ததால் ரசிகர்கள் சிதறி ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

மலப்புரம் அரிக்கோடு தேராட்டாமாலில் நடைபெற்ற செவன்ஸ் கால்பந்து போட்டியின் போது வாணவேடிக்கை வெடித்ததில் 12க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர்.

யுனைடெட் எஃப்சி நெல்லிகுத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டித் துவங்குவதற்கு முன்பு பட்டாசு வெடிக்கப்பட்டது.

மைதானத்தின் நடுவே வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து சிதறியதில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த ரசிகர்கள் மீது வந்து விழுந்தது.

இதனால் கால்பந்து ரசிகர்கள் சிதறி ஓடியதை அடுத்து இதில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இரவு 8:30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் அதிகமான காயம் ஏற்படவில்லை என்றும் பட்டாசு வெடிக்க போட்டியாளர்கள் அனுமதி பெறவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.