டெல்லி: நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் பதவியேற்றார். அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷியும் பதவி ஏற்றார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் பிப்ரவரி 18-ம் தேதி ஒய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ், நாட்டின் 26வது தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஞானேஷ் குமார் இன்று காலை (பிப்ரவரி 19) நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்று கொண்டார்
இவரைத்தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விகேக் ஜோஷியும் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமார் ஜனவரி 26, 2029 வரை பதவியில் இருப்பார். இவரது பதவிக்காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேலும், 2027-ம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களையும் நடத்துவார். 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.