சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின் இன்கறு வணிக வரி மற்றும் பதிவுத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 16 கோயில்களில் 24 புதிய திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, உதவி ஆணையர் அலுவலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.79 கோடி செலவில் 7 திருக்கோயில்களில் 15 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதையடுத்து, வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் புதிய சார்-பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதன்படி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் புதிய சார்-பதிவாளர் அலுவலகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சார்-பதிவாளர் அலுவலகங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட காடையாம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாகலூர் சார் பதிவாளர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.