சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதால் இன்று 25 சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள், பேருந்துகளை பிடித்து சென்னை வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப். 13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.