துரை

நேற்றிரவு மதுரை மாட்டுத்தாவ்ணி அருகில் உள்ள ஆர்சை இடிக்கும் போது நடந்த் விபத்தில் ஒரு ஜேசிபி ஆபரேட்டர் உயிரிழந்தார்,

ஆர்ச் வடிவில் வைக்கப்பட்டுள்ள  ஒரு பழமையான நுழைவு வாயில் மதுரை மாட்டுத்தாவணி பிரதான சாலையில் ஆம்னி பஸ் நிலையத்தின் முன்பாக சாலையின் நடுவே உள்ளது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வந்ததால், இதனை இடிப்பதற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயிலை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் நடந்தது.

பொக்லைன் ஆபரேட்டர், தோரணவாயில்(ஆர்ச்) பகுதிகளை எந்திரம் மூலம் இடித்து கொண்டிருந்தபோது தோரணவாயில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து பொக்லைன் எந்திரம் மீது விழுந்ததில் சம்பக்குளம் பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் (வயது 32)என்பவர் மீது தூண் விழுந்தது. இவருடன் ஒப்பந்ததாரர் சிந்தாமணியை சேர்ந்த நல்லதம்பியும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நல்லதம்பி மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

[youtube-feed feed=1]