சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. அரசு கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் இதுவரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான ( 2025-26-ம் பட்ஜெட்) பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது பட்ஜெட் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.