டெல்லி
இன்று டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து பாஜக ஆலோசனை செய்ய உள்ளது.

கடந்த 5 ஆம் தேதி நடந்து 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது.
எனவே பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜ்ச்க 48 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி மாநில ஆட்சியை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜனதா கைப்பற்றியது.
இவ்வாறு டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வென்ற நிலையில் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.