சென்னை

ரும் 11 ஆம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலார் நினைவு தினம் வருகிற 11-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

எனவே அன்றைய தினம் தமிழகம் முழுவதும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதை மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொருந்தும் என டாஸ்மாக் விடுமுறை தொடர்பான அறிவிப்பில் அந்தந்த மாவட்ட அட்சியர்கள் தெரிவித்துள்ளனர்