கடலூர்: கடலூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார்  பள்ளி  விடுதியில் தங்கியிருந்து படித்த மாணவி ஒருவர்,  அங்குள்ள விடுதியின் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி‌ உள்ளது. இது தற்கொலை என கூறப்படும் நிலையில், மாணவியின் தாயார் கொலை என குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு கடலூர் அருகே கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் விடுதியில் தங்கியிருந்து படித்த வந்த  கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர்,  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதை அந்த பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து, தற்போது கடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர்,  தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடலூர் மேலபட்டாம்பாக்கம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் உள்ள கழிவறையில் மாணவி  தூக்கிட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையில், இறந்த மாணவி,  விழுப்புரம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீ‌வித்யா என்பவரின் 2வது மகள் கோவஶ்ரீ என்பது தெரிய வந்துள்ளது.  இவர் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவி கோவஸ்ரீ திடீரென்று பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறி   சக தோழியுடன் விடுதியில் இருந்து வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவரை காணவில்லை என தேடியபோது, அந்த மாணவி அங்குள்ள  விடுதி கழிவறை பகுதியில் கோவஸ்ரீ தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.

இதை கண்ட அவரது தோழி,  விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து,  விடுதி காப்பாளர்  மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவியை காப்பாற்றி, சிகிச்சைக்காக நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மாணவி கோவஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கோவஸ்ரீ உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இறந்த மாணவி கோவஸ்ரீயின் தாயார் ஸ்ரீவித்யா தனது மகளை பள்ளி நிர்வாகத்தின்ங்ர கொன்றுவிட்டனர். தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கதறி அழுதார்.

இந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் பள்ளி மாணவி கோவஸ்ரீ தூக்கிட்டு இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.