திருப்பத்தூர்: 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும், சிறுமியின் பெற்றோரை மிரட்டியும் வந்த திமுக கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் திமுக கவுன்சிலர்  மகேந்திரன் (45) என்பவர் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் கொடுத்த புகாரை பதிவு செய்த திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், அது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் திமுக கவுன்சிலர்  மகேந்திரன் அந்த சிறுமியின் பாலியல் சேட்டை செய்து வந்தது உறுதியானது. விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி, ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், இவருக்கு தந்தை இல்லாத நிலையில், அரவணைப்பில் வளர்ந்து வரும் 14 வயது சிறுமிக்கு பலமாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். அவர் நேரடியாக சம்மந்தப்பட்டவரிடம் சென்று கேட்டபோது, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்தே திமுக கவுன்சிலர் மகேந்திரனை  அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   இவர் பாச்சல் கிராம பஞ்சாயத்தின் 10 வது வார்டு திமுக  உறுப்பினராக உள்ளார்.  திமுக கிராம வார்டு உறுப்பினரான மக்கள் பிரதிநிதி 14 வயது சிறுமிக்கு பாலில் தொந்தரவு கொடுத்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

பாளை. சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! பேராசிரியர் கைது