தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த நிலையில் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ. 7930க்கு விற்பனையானது.
8000 ரூபாயை எட்டிப்பார்க்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக கிராமுக்கு ரூ. 540 குறைந்துள்ளது.

வழக்கமாக கிராமுக்கு நூறு ரூபாயில் உயர்வை சந்திக்கும் தங்கம் குறையும் போது 50, 60 ரூபாய் என குறையும்.
ஆனால் இன்று திடீரென கிராமுக்கு ரூ. 540 குறைந்திருப்பது தங்கம் வாங்க வந்த மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இதையடுத்து தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 59,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று சவரனுக்கு ரூ. 63,440 என்று விறபனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 4,320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 107 என்ற நிலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.