ரோடு

நேற்று முன்தினம் நடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு 6.7% குறைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல்  ஏ வன காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் 2-வது முறையாக அங்கு நேற்று  முன்தினம் இடைத்தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு 237 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.  இந்த இடைத் தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் காலை நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு குறைந்த அளவிலான வாக்காளர்களே வந்தனர். அதாவது காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் அப்படியே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஜனநாயக கடமையாற்றிவிட்டு சென்றதால்  சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுப்போட்டனர்.

அதே வேளையில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எந்த தாமதமும் இன்றி வந்த உடன் தங்கள் வாக்கை பதிவு செய்து சென்றதால் மந்தமான நிலை காணப்பட்டது.  மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மைய வளாகத்துக்குள் வந்த வாக்காளர்களுக்கு மட்டும் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, சரியாக 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவு கதவுகளும் மூடப்பட்டன.

நேற்று முன்தினம் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலுடன் ஒப்பிடும்போது 6.72 சதவீத வாக்குகள் குறைந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டில், இந்தத் தொகுதியில் 74.69 சதவீத வாக்குகள் பதிவான போது காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம். நடந்த ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.  நாளை காலை 11 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்.