சென்னை: “நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார்.

உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம் என அவரின் பிறந்த நாளையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம். அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், துடியலூர் – கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும்.
அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன். அய்யா நாராயண சாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]