சென்னை: சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு பேருந்துக்காக சாலையோரம் நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை கத்திமுனையில் ஆட்டோவில் ஏற்றி, அவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள், கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையின் புறநகர் பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் மாற்றப்பட்ட பிறகு, மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பேருந்து நிலையமான இங்கு இரவு நேரங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில்தான் இளம்பெண் ஒருவரை ஆட்டோ டிரைவர்கள் கத்திமுனையில் ஆட்டோவில் ஏற்றிச்சென்று பாலியல் சேட்டை வந்தது, பெண்ணின் சத்தம் கேட்டு, அந்த பகுதியைச்சேர்ந்த கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோவை மடக்கிய காவல்துறையினர்,.முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகிய இரு ஆட்டோ டிரைவர்களை கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இரவு நேரம் வரும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
சம்பவத்தன்று இரவு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண் மாதவரம் பகுதியில் பணியாற்றி வரும் தனது, காதலனை சந்திக்க, கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு, அதிகாலை வந்துள்ளார். அப்போது, எங்கு செல்வது எனத் தெரியாமல், பஸ் முனைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அவரை, நோட்டமிட்ட ஆட்டோ ஒட்ளுநர்கள், திடீரென அந்த இளம்பெண் கழுத்தில் கத்தியை வைத்து, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி, கடத்திச் சென்றனர்.

அப்போது இளம்பெண் கூச்சலிட்டத்தை தொடர்ந்து, சாலையில் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார், சாலையில் சென்ற ஆட்டோவை விரட்டிச் சென்றுள்ளனர். போலீசார் தங்களை பின்தொடர்ந்து வருவதை அறிந்த மர்ம நபர்கள், அப்பெண்ணை இறக்கி விட்டு தப்பிச் சென்றனர். இளம்பெண்ணை மீட்ட போலீசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்தனர். ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் கடத்தப்பட்ட இந்த சம்பவம், சென்னை மாநகர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.