
குமரன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியின் நடவடிக்கையால் மலை தொடர்பான பிரச்சினை பூதாகாரமாக மாறியது. இந்து இஸ்லாமியர்கள் ஒற்றுபட்டு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இரு தரப்பு மக்களிடையே சலசலப்பு எழுந்துள்ளது. நவாஸ்கனி ஒருசிலருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதன் காரணமாக, இன்று தென்தமிழகம் முழுவதும் மாமன் மச்சான் என பழகி வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே மனக்கிலேசங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு உ.பி.போல மாறும் நிலை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தனர். மக்களிடைய மத ரீதியிலான சலசலப்பு ஏற்பட காரணமாக இருந்த, ஆடு கோழிகளை வெட்டுவோம் என முரண்டு பிடித்த நபர்கள், அவர்களுக்கு பின்புலகமாக செயல்பட்ட அமைப்புகள், இதற்கு காரணமாக நவாஸ்கனியை தடுக்க தவறிய காவல்துறை மற்றும் நடவடிக்கை எடுக்க தயங்கும் தமிழ்நாடு அரசு குறித்து கடுமையான அதிருப்தி எழுந்துள்ளன.
இதைத்தொடர்ந்தே திருப்பரங்குன்றம் குமரன் மலையை காக்க இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. அதைத்தொடர்ந்து பிப்ரவரி 4ந்தேதி நடைபெற்ற மாபெரும் அறப்போராட்டம் இந்து மக்களின் எழுச்சியை நிரூபித்துள்ளது. இதன் காரணமாக திருப்பரங்குன்றம் விஷயத்தில் தமிழ்நாடு அரசு எதிர்காலத்தில் எப்படி செயல்படப்போகிறது என்பது தமிழக மக்களிடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்காவிற்கு எப்போதும்போல் சென்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு கட்சியாகவோ, இயக்கமாகவோ செல்லக்கூடாது என்றும், அதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை கூறியுள்ளது.
குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!