காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள் 3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு எற்பட்டு உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு தொழிற்சங்கம் அமைக்க அனுமதி, ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அமைச்சர்களும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சாம்சங் நிறுவனம் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராததால், அந்த பேச்சு வார்த்தை தோல் அடைந்தது. இதையடுத்து, போராட்டத்தை முன்னெடுத்து வந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை திமுக அமைச்சர்கள் சந்தித்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்,. இதையடுத்து கடந்த அக்டோபர் 14ம் தேதி வழக்கம் போல சாம்சங் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
பின்னர் தொழிற்சங்கத்தை ஆலையில் அங்கீகரித்து பதிவு செய்யாதது குறித்து சி.ஐ.டி.யு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த சாம்சங் நிர்வாகம், போராட்டம் நடத்திய ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொண்டது.
ஏற்கனவே ஒப்பந்த ஊழியர்கள் உள்பட பலர் பணி நீக்கப்பட்ட நிலையில், , தொழிற்சங்கத்தில் இருந்து விலகுவதாக சுமார் 400க்கும் மேற்பட்ட ஊழியர் களிடம் நிறுவனம் தரப்பில், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சலசலப்பு தொடர்கிறது. பலர் வாழ்வாதாரம் கருதி கையெழுத்துக்களை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி போராடிய சாம்சங் ஊழியர்கள் 3 பேரை திடீரென நிர்வாகம் இடை நீக்கம் செய்து அறிவித்தது. அதன்படி, சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான மோகன்ராஜ், சிவனேசன், குணசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இது சக ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இரதயடுத்து, சாம்சங் ஆலை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு தொழிற் சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது சாம்சங் நிறுவனத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி…
தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்ற சாம்சங் : தமிழக அமைச்சர் அறிவிப்பு