டெல்லி

பாஜக எம் பியும் பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி தனது கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.

வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவுள்ள நிலையில்,  நேற்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடிகரும் திருச்சூர் எம்பியுமான சுரேஷ் கோபி பங்கேற்று உரையற்றி உள்ளார்.

சுரேஷ் கோபி தனது உரையில்,,

” பழங்குடியினர் நலத்துறையை எனக்கு வழங்க வேண்டும் என்று  பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பழங்குடியினர் நலத்துறைக்கு உயர் வகுப்பினர் அமைச்சரானால் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சராக முடியும் என்பது நம் நாட்டின் சாபக்கேடு”

என்று கூறினார்.

இதற்கு கேரள மாநில அமைச்சர் ராஜேஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பினோய் விஸ்வம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  மேலும் கண்டங்கள் குவிந்த நிலையில் தனது கருத்தை  திரும்ப பெறுவதாக சுரேஷ் கோபி  தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கோபி

”நான் யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை என்றும் தன்னுடைய கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படாததால், கருத்தை திரும்ப பெறுகிறேன்””

எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]