சென்னை
வரும் 10 ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியப்போது கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என குற்றம் சாட்டி கவர்னர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகிற 10 ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் குறித்த முக்கியமான திட்டங்கள் குறித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel