டெல்லி

பிரதமர் மோடி இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை செலுத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ எனபட்டும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ விண்ணில் செலுத்த்டியுள்ள ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

நேற்று காலை 6.23 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் தரை,கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை தெரிவிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி  எக்ஸ் தளத்தில்.

”வரலாற்று சிறப்புமிக்க 100வது ஏவுதலுக்காக இஸ்ரோ-க்கு வாழ்த்துகள்! இந்த நம்பமுடியாத மைல்கல் நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் தொலைநோக்கு, மற்றும் அர்ப்பணிப்பை விளக்குகிறது. தனியார் துறை கைகோர்ப்பதன் மூலம், இந்தியாவின் விண்வெளி பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும்.”

என்று பதிவிட்டுள்ளார்.