சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில இடங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (25-01-2025) சனிக்கிழமை அன்று துணை மின் நிலையங் களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
சென்னை மின்தடை பகுதிகள்:-
தரமணி 1. தரமணி பகுதி 2. கனகம் 3 . பெரியார் நகர் 4. திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி 5.எம்.ஜி.ஆர் நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்) 6.வேளச்சேரிபார்ட் 7.விஎஸ்ஐ எஸ்டேட் கட்டம்-I 8.100 அடி சாலை பகுதி 9.அண்ணா நகர் 10. சி.எஸ்.ஐ.ஆர். சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மிலானியம் (கந்தஞ்சாவடி), சிபிடி பகுதி, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர் மற்றும் அடையார் பகுதி.
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை, முழு ஈக்காட்டுதாங்கல் பகுதி, முழு காந்தி நகர் பகுதி, முழு பூந்தமல்லி சாலை, ஜே.என். சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி அனைத்து தெரு, பிள்ளையார் கோயில் 1 முதல் 5வது தெரு, ஏ, பி, சி & டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, முழு பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர் மற்றும் முனுசாமி தெரு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.