டெல்லி
டெல்லி சட்டசபை தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அடுத்த மாதம் 5 ஆம் தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தலும் பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்கிறது.. ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர் என்று டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதே வேளையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள் 70 சட்டசபை தொகுதிகளில் 38 தொகுதிகளில் 10க்கும் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திலக் நகர், மங்கோல்புரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் போன்ற குறிப்பிடத்தக்க சட்டசபை தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்களும், சாந்தினி சவுக், ராஜேந்திர நகர் மற்றும் மாளவியா நகர் ஆகிய தலா 7 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஏற்லில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் 70 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நேரத்தில் பாஜக 68 இடங்களில் போட்டியிடுகிறது, பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் லோக்தந்திரிக் ஜன் சக்தி கட்சிக்கு இரண்டு இடங்கள் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 69 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளது.