சென்னை: மாநகர பேருந்துகளில்  மாதாந்திர பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு  செய்து மாநகர பேருந்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி ஜனவரி 24ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் ஏராளமான பயணிகள், பேருந்துகளில் டிக்கெட் எடுப்பதை தவிர்க்கும் வகையில்,  மாதாந்திர பயண அட்டை பெற்று பெற்று, அதன்மூலம் சிரமமின்றி மாநர பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.   இந்த   மாதாந்திர பேருந்து பயண அட்டையாது,   ஒவ்வொரு மாதமும், மாதத்தின் 16ஆம் தேதி வரை விநியோகிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் பலரும் மாதாந்திர பயண அட்டையை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  பயணிகளின் வசதிக்காக, மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஜனவரி 24ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும். ரூ.1,000 பேருந்து பயண அட்டை, மாணவர்களுக்கான 50 சதவீத சலுகை பயண அட்டை அனைத்தையும் ஜனவரி 24 வரை மாநகரப் போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.