சென்னை: முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்  மற்றும் சீட்டா நுழைவு தேர்வுக்கு ஜனவரி 24 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

எம்.பி.ஏ, எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21வரை www.tancet.annauniv.edu என்றும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகம். முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்.எம் ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல்  கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும்அறிவியல்/கலை  கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி  நிறுவனங்கள் ஒப்படைத்த  எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான பொது மாணவர் சேர்க்கையை (TAMIL NADU COMMON ENTRANCE TEST -TANCET ) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

அதேபோன்று,  மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல்  கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ ஆகியவற்றில் உள்ள எம்.இ.,எம்டெக் (M.E.,M.Tech., M.Arch., M.Plan) போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிரத்தியோக நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

அதன்படி  2025ம் ஆண்டுக்கான எம்.பி.ஏ., எம்.சி.ஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வரும் மார்ச் 22ம் தேதி நடைபெறும் என்றும், எம்.இ.,எம்டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிராத்தியோக நுழைவுத் தேர்வு (CEETA-PG) மார்ச்- 23ம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 24ந்தேதி தொடங்குவதாக  அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.